full screen background image

மகனை ஹீரோவாக்கி படம் இயக்கும் நடிகர் சரண்ராஜ்..!

மகனை ஹீரோவாக்கி படம் இயக்கும் நடிகர் சரண்ராஜ்..!

தென்னக சினிமாவில் புகழ் பெற்ற வில்லன் நடிகரான சரண்ராஜ் தனது இரண்டாவது மகனான தேவ் சரண்ராஜை தான் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். 

பெயர் சூட்டப்படாத இந்தப் புதிய படத்தை Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்,

நாயகன், குணசித்திரம், வில்லன் என்று அனைத்துவித கதாப்பாத்திரங்களிலும் தனி முத்திரை பதித்து,  தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர் நடிகர் சரண்ராஜ்.

தற்போது ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குநராக தமிழ்த் திரையுலகத்தில் கால் பதிக்கிறார் சரண்ராஜ். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இந்தப் புதிய படத்தை சரண்ராஜே இயக்கவுள்ளார்.

பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து நடிக்கத் தயாராக இருந்த அவரது இரண்டாவது மகனான தேவ் சரண்ராஜ் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.  

இப்படத்தில் இரண்டு காதல் ஜோடிகள் நடிக்கவுள்ளனர். தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா சுரேஷ் முதன்மை ஜோடியாக நடிக்க, ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாசலம் இன்னொரு ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜனார்த்தனன் செய்கிறார். இணை இயக்கம்,  பாடல்களை  K.சுரேஷ் குமார் மேற்கொள்கிறார்.

ஒரு மீனவக் குப்பத்தில், மீனவ இளைஞனுக்கும், மார்வாடி பெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் கதைதான் இந்தப் படமாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கம் பகுதியில் தொடர்ந்து 45 நாட்கள் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை, ஏலகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளிலும்  படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம்  விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பாலவாக்கத்தில்  பூஜையுடன் இனிதே துவங்கியது.

Our Score