full screen background image

‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படம் மார்ச் 26-ல் வெளியாகிறது

‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படம் மார்ச் 26-ல் வெளியாகிறது

நிலா ப்ரமோட்டர்ஸ், TN75 K.K.கிரியேஷன்ஸ், ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’.

இந்தப் படத்தில் கல்லூரி’ அகில், ‘சதுரங்க வேட்டை’ இஷாரா நாயர்,  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சூப்பர் சுப்பராயன், கௌசல்யா மற்றும் விஜய் டிவி, சன் டிவி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரஹிம் பாபு, இசை – வர்ஷன், ஜெய்டன், படத் தொகுப்பு – U.R.S.சுரேஷ், சண்டை இயக்கம் – ‘சூப்பர்’ சுப்பராயன்,  கலை இயக்கம் – ஜான் பிரிட்டோ, இணை தயாரிப்பு – பாலகிருஷ்ணன் மற்றும் வைஸ்லின், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கெவின்.

கிராமத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்று சென்னை கிளம்பி வரும் இளைஞன் தன்னுடைய முயற்சி தோல்வி அடைவதால் மீண்டும் தன் கிராமத்துக்கே சென்றுவிடுகிறான். தன்னை பெரிதும் நம்பும் நடிகர் மொட்டை ராஜேந்திரனின் உதவியுடன் மீண்டும் சென்னைக்கு வந்து யோகி பாபுவுடன் இணைந்து மீண்டும் தனது போராட்டத்தைத் துவக்குகிறார். இதில் நாயகன் ஜெயித்தாரா.. இல்லையா…? என்பதுதான் மீதி கதை.

இப்படம் வரும் மார்ச் 26-ம் தேதியன்று உலகமெங்கும் திரைக்கு வர விருக்கிறது.

Our Score