நடிகர் மன்சூர் அலிகானின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

நடிகர் மன்சூர் அலிகானின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

நடிகர் மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்பு மனுவை அவர் நேற்றைக்குத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனு பட்டியலுடன் தன்னுடைய சொத்துப் பட்டியலையும் இணைத்திருக்கிறார்.

அதன்படி, மன்சூர் அலிகான் கையில் ரொக்கமாக 50,000 ரூபாய் வைத்திருக்கிறார். அவருடைய மனைவிகள் இருவரும் தலா 25,000 ரூபாய் வைத்திருக்கிறார்கள். அவருடைய பிள்ளைகள் இருவர் தலா 5,000 ரூபாய் வைத்திருக்கிறார்கள்.

மன்சூர் அலிகான் தனது 2 சேமிப்புக் கணக்குகளிலும் சேர்த்து 12,810 ரூபாய் வைத்திருக்கிறார். அவருடைய மனைவி 1,071 ரூபாய் வைத்திருக்கிறார்.

20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரும், 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்னொரு காரையும் மன்சூர் அலிகான் வைத்துள்ளார்.

அவருடைய இரண்டு மனைவிகளும் 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 400 கிராம் தங்க நகைகளை வைத்திருக்கிறார்கள்.

16 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அவருடைய மகள்கள் வைத்திருக்கிறார்கள்.

இவருடைய முதல் மனைவி 17 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், இரண்டாவது மனைவி 17 லட்சத்து 1 71 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும் வைத்துள்ளனர்.

இவருடைய ஒரு பிள்ளை 10 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்தையும், இன்னொரு பிள்ளை 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்தையும் வைத்துள்ளனர்.

மன்சூர் அலிகான் 6 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், முதல் மனைவி 6 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்தையும், இரண்டாவது மனைவியும், இரண்டு பிள்ளைகளும் தலா 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும் வைத்துள்ளனர்.

மன்சூர் அலிகானுக்கு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் இருக்கிறது. மேலும் அரும்பாக்கத்தில் அவர் குடியிருக்கும் வீட்டின் மதிப்பு 1 கோடியே 60 லட்சம் ரூபாயாகும்.

ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் கார் லோனாக 9,06,029 ரூபாயும், இன்னொரு கடனாக 1,11,803 ரூபாயும் மன்சூர் அலிகானுக்கு இருக்கிறது.

ஆக மொத்தத்தில் மன்சூர் அலிகான் 1 கோடியே 73 லட்சத்து 35 ஆயிரத்து 83 ரூபாய்க்கான அசையும் சொத்துக்களை வைத்திருக்கிறார்.

அசையா சொத்தாக 1 கோடியே 60 லட்சம் ரூபாயும் வைத்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.

Our Score