full screen background image

‘எந்திரன்’ படத்தின் கதைத் திருட்டு வழக்கு – ஷங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

‘எந்திரன்’ படத்தின் கதைத் திருட்டு வழக்கு – ஷங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் எந்திரன்’.

ஹாலிவுட் படமான ‘ரோபோ’வை தழுவி, சுஜாதாவின் வசனத்தில் உருவான படம்.  இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும், காப்புரிமையை மீறி தன் அனுமதியை பெறாமல் கதையை திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி, இயக்குர் ஷங்கருக்கு எதிராக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம். வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.  இதை எதிர்த்து ஆரூர் தமிழ்நாடன் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆரூர் தமிழ்நாடன் தரப்பில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

“காப்புரிமை தொடர்பான வழக்குகளில் மேல் முறையீடு செய்ய சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தகைய வரம்புக்குள் இந்த மனு வராது…” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Our Score