full screen background image

கோவில் சிலை திருட்டைக் கண்டுபிடிக்கும் கதையில் உருவாகும் புதிய படம்

கோவில் சிலை திருட்டைக் கண்டுபிடிக்கும் கதையில் உருவாகும் புதிய படம்

பல தமிழ்ப் படங்களை விநியோகம் செய்திருக்கும் எஸ்.சிவபிரகாஷ் முதல்முறையாக பெரும் பொருட்செலவில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்.

கருப்பு கண்ணாடி’ படத்தின் கதாநாயகனும், ‘அருள்நிதியின் டைரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரான தணிகை இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக அறிமுக நாயகியான சோனியா நடிக்கிறார்.

ரான்’, ‘எழுமின்’ போன்ற படங்களில் பணியாற்றிய வியன் ராஜா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘உறியடி’ படத்தின் கலை இயக்குநரான ஏழுமலை ஆதிகேசவன் கலை இயக்குநராகப் பணி புரிகிறார். எழுமின்’, ‘மை டியர் லிசா’ மற்றும் ‘அலேகா’ ஆகிய படங்களில் பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்தில் படத் தொகுப்புப் பணியைச் செய்கிறார். சண்டை இயக்குநராக பயர்’ கார்த்திக் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தை பாகுபலி’, ‘கபாலி’ மற்றும் ‘விவேகம்’ போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குராக அறிமுகமாகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சதீஷ் சேகர் பேசும்போது, “பழங்காலக் கோவில் ஒன்றில் சிலை திருடு போக, அதைத் தொடர்ந்து பல கொடூர மரணங்கள் நிகழ்கின்றன. அதற்கான காரணங்களை நாயகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பதுதான் பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இப்படம் உருவாகவிருக்கிறது..” என்றார்.

Our Score