S.R. பிலிம் பேக்ட்ரி சார்பில் தயாரிப்பாளர் S.R.ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.
இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆர்த்திஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.
மேலும் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ, அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – S.R.பிலிம் பேக்டரி, நிர்வாக தயாரிப்பு – விக்னேஷ்(A)சமீர் – விஷ்ணு பிரசாத் – அஜித்குமார், இயக்கம் – S.R.ராஜன், இசை (பாடல்கள்) – அவினாஷ் கவாஸ்கர், பின்னணி இசை – ஜுபின், ஒளிப்பதிவு – செல்வம் முத்தப்பன், படத் தொகுப்பு – ராஜேஷ் குமார், கலை இயக்கம் – கோபி ஆனந்த் – கே.ஜி.எப்.ஷியாம் – மஞ்சு, பாடல்கள் – அன்புசெழியன் – விஷ்ணு ராம், சண்டை இயக்கம் – மாஸ் மாதா, பத்திரிக்கை தொடர்பு – A.ஜான்.
சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
உலக அளவில் 250 திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வரும் பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியாகிறது.










