full screen background image

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்..!

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்..!

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ ஆகிய படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் அடுத்தாண்டு மீண்டு்ம் படத் தயாரிப்பில் இறங்கப் போகிறதாம்.

கெளதம்மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், கெளதம் மேனனுக்கும் இடையில் கோர்ட், கேஸ் என்று பல பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போதும் அந்த வழக்குகள் நிலைவையில் இருந்தாலும் தங்களது படத் தயாரிப்புப் பணியை மீண்டும் தொடரப் போவதாக அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

இந்தாண்டின் ஹிட் படங்களில் ஒன்றான ‘யாமிருக்க பயமே’ படத்தைக் கொடுத்த இயக்குநர் டிகேவின் இயக்கத்தில் தனது அடுத்தப் படத்தைத் துவக்கவிருக்கிறது ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம்.

“2015-ம் ஆண்டு மீண்டும் எனது நிறுவனம் நல்ல தரமான படங்களைக் கொடுக்கவிருக்கிறது. முதல் படமாக இயக்குநர் டிகே இயக்கும் ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளேன். டிகே சொன்ன கதை என்னை அசர வைத்திருக்கிறது. எப்படி டிகேயினால் இந்த அளவுக்கு சிந்திக்க முடிந்தது என்கிற ஆச்சரியமும் எனக்குள் ஏற்பட்டுள்ளது.  யாமிருக்க பயமே படத்திலிருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதுவரையில் நான் தயாரித்த படங்களை போலவே இதுவும் மாறுபட்ட படமாகவும், என் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படமாகவும் இது இருக்கும்..” என்று உறுதியாகச் சொல்கிறார் நிறுவனத்தின் தலைவரான எல்ரெட் குமார்.

Our Score