full screen background image

விஜய்யின் 60-வது படத்தில் மேலும் ஒரு மலையாள ஹீரோயின்..!

விஜய்யின் 60-வது படத்தில் மேலும் ஒரு மலையாள ஹீரோயின்..!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவருடைய 60-வது திரைப்படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகையும் நடிக்கவிருக்கிறார்.

தற்போது நடிகர் விஜய் பெயர் இன்னும் வைக்கப்படாத தன்னுடைய 60-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விஜயா வாஹினி புரொடெக்சன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.

vijay-keerthy suresh-3

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், ‘மைம்’ கோபி, ஹரீஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா போன்றோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சுகுமாறன், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – கவியரசு வைரமுத்து, கலை இயக்கம் – பிரபாகர், சண்டை பயிற்சி – அனல் அரசு, காஸ்ட்யூம் டிஸைன் – ப்ரீத்தி ரெட்டி, சத்யா, காஸ்ட்யூமர் – கே.ராஜன், புகைப்படம் – அர்மித் ராஜ்.

‘தூள்’, ‘கில்லி’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவரும், ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவருமான இயக்குநர் பரதன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

aparna vinod-3

இப்போது இந்தப் படத்தில் மலையாள நடிகையான அபர்ணா வினோத், இரண்டாவது ஹீரோயினாக முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறாராம். இவர் ஏற்கெனவே Kohinoor, Njan Ninnodu Koodeyundu ஆகிய மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். இது இவருக்கு முதல் தமிழ்ப் படமாகும்.

20 வயதான அபர்ணா பிஎஸ்ஸி சைக்காலஜி படித்தவர். விஜய் பட வாய்ப்பு பற்றி பேசுகையில், “ஒரு நாள் பரதன் ஸார் ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தது. ஆச்சரியமான அழைப்பு அது. ஓடோடி வந்து அவரைச் சந்தித்தேன். கதையையும், என்னுடைய கதாபாத்திரத்தையும் அப்படியே வரிக்கு வரி சொல்லி அசத்தினார். சொன்னவுடனேயே நான் மறுக்காமல் ஒத்துக் கொண்டேன். இளைய தளபதி விஜய்யுடன் நடிப்பதென்பது என்னை மாதிரியான புதிய, இளம் நடிகைகளுக்கு ஒரு இனிய கனவுதானே.. அது இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

aparna vinod-1

தமிழ்த் திரைப்படங்கள் சிறந்த பொழுது போக்கு நிறைந்தவை. அவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், விஜய், சூர்யா, நயன்தாரா படங்களென்றால் நான் விடவே மாட்டேன். விரட்டி விரட்டி பார்த்துவிடுவேன். இந்த்த் தமிழ்ப் படங்களைப் பார்த்துதான் தமிழ் மொழியைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டேன். ரொம்ப ஸ்வீட்டான மொழி தமிழ்.. விரைவில் பேசக் கற்றுக் கொள்வேன்..” என்று உற்சாகமாகச் சொல்கிறார்.

இத்தனை பேசிவிட்டு, மறந்தும்கூட படத்தின் கதையையும், தன்னுடைய கேரக்டர் பற்றியும் மூச்சுவிடவே இல்லை..!

ம்.. பொண்ணு பொழைச்சுக்கும்..!

Our Score