நடிகை அஞ்சலி நடிக்கும் 50-வது படமான ‘ஈகை’ சென்னையில் துவங்கியது.
இந்தப் படத்தை கிரீன் அமூசிமெண்ட் மற்றும் D3 புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, புஷ்பா பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
எழுத்து, இயக்கம் – அசோக் வேலாயுதம், ஒளிப்பதிவு – ஸ்ரீதர், படத் தொகுப்பு – பிரவீன் K.L., இசை – தரன்குமார், கலை இயக்கம் – த.இராமலிங்கம், நடன இயக்கம் – ஸ்ரீதர், பாடல்கள் – விவேகா, அறிவு, சண்டை இயக்கம் – கணேஷ், தயாரிப்பு – தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகர்.
இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் இமையம் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி முன்னிலையில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பையில் நடைபெறவுள்ளது.
இந்த ‘ஈகை’ படம் குறித்து இயக்குநர் அசோக் வேலாயுதம் பேசும்போது, “சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக இந்த ‘ஈகை’ படம் உருவாகிறது. ஈகைக் குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த ‘ஈகை’ திரைப்படம்..” என்றார்.












