தயாரிப்பாளர்கள் கிருஷ்ணமச்சாரிய ராமபத்திரன், பிருந்தா இருவரும் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘ஈகை’.
சமுக நீதி – அரசியல் பகுத்தறிவு – பொருளாதாரம்… இது மூன்றும்தான் ஒரு மனிதனை மேன்மைபடுத்தும். அதை மையப்படுத்தி உருவாகி வரும் படம்தான் ‘ஈகை’.
இப்படம் ஒரு பெண்ணை மையப்படுத்திய படம். கதையின் நாயகி அஞ்சலியுடன் சேர்ந்து சந்தோஷ் பிரதாப் – சுனில் – அர்ஜய் – பொன்வன்னன் – ஹரிஷ் பேரடி – அபிராமி – தீபா – புகழ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் மார்க் எனும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரோஷன் கனகராஜ் என்பவர் அறிமுகமாகுகிறார். இந்த மார்க் எனும் கதாப்பத்திரம் – ‘புஷ்பா’ பட வில்லன் சுனிலுடன் சார்ந்த கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாய் திருப்புமுனையாய் இருக்கும். இத்துடன் சேர்ந்து ‘அருவி’ பாலா–ரூபினி மற்றும் 25 புதிய முகங்கள் இந்தப் படத்தில் அறிமுகமாகுகிறார்கள்.
இப்படத்தின் ஒளிபதிவாளர் ஸ்ரீதர், இதற்கு முன் ‘மயக்கம் என்ன’ – ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் ஒளிபதிவாளராக செய்துள்ளார் .
மற்றும் ‘விடாமுயற்சி’ – ‘சரோஜா’ – ‘ஆரண்யா காண்டம்’ போன்ற படங்களில் வேலை செய்து தேசிய விருது வாங்கிய N.B.ஸ்ரீகாந்த்துதான் இப்படத்தின் எடிட்டர்.
மற்றும் ‘காலா’ – ‘கபாலி’ – ‘சார்பாட்ட பரம்பரை’ – ‘கேப்டன் மில்லர்’ – போன்ற படங்களின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் இப்படத்தில் பணியாற்றியுள்ளார் .
வசனம் எழுதியவர் டைரக்டர் . பரதன். ‘தில்’ – ‘தூள்’ – ‘கில்லி’ – ‘வீரம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர்.
இசை – தரன் குமார் – ஸ்டண்ட் மாஸ்டர் சிறுத்தை கணேஷ் – பாடல் வரிகள், கார்த்திக்.
இப்படத்தின் இயக்குநர் அசோக் வேலாயுதம், இதற்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் பிளாஷ்பேக் மற்றும் கிளைமாக்ஸ் இயக்கியதுடன் படப்பிடிப்பு முழுமை அடைந்துவிடும்.









