full screen background image

சென்னையில் கல்விக் கடன் உதவியுடன் கல்வி கண்காட்சி..!

சென்னையில் கல்விக் கடன் உதவியுடன் கல்வி கண்காட்சி..!

இன்றைய சூழ்நிலையில் உயர் கல்வி கற்க அதிக செலவுகள் ஆகின்றது. மேலும் நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வின்போது பயத்தால் சரியான மதிப்பெண் எடுக்க முடிவதில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் பயன் பெரும்வகையில்  உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங்க் ஆட்ஸ் இணைந்து பன்னாட்டு கல்வி கண்காட்சியை வரும் மே 28 மற்றும் 29-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  நடத்தவுள்ளன.

இந்தக் கண்காட்சியை மேதகு தமிழக ஆளுநர் துவக்கி வைக்க இசைந்துள்ளார்.  இந்தக் கண்காட்சியில் முன்னணி உள்நாட்டு. வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்  பங்கு பெறவுள்ளன.  மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் அனைத்து தேசிய வங்கிகளும் இங்கு அரங்கம் அமைக்க உள்ளன.

இந்தக் கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி கட்டணம் எவ்வளவு எனவும் பத்தாம் வகுப்பு படித்து முடித்து ஒரு வருடம் பவுண்டேஷன் கோர்ஸ் முடித்துவிட்டு நேரடியாக இளங்கலை படிப்பு மற்றும் முதுகலை படிப்பு படிக்க நேரத்தையும், கல்வி கட்டணத்தையும் குறைக்கும் சேவையை செய்யும் மலேசியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களும் இங்கே அரங்கம் அமைக்க உள்ளன.

பொருளாதார வசதி குறைந்தவர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொறியியல், பைலட், மற்றும் கடல் சார் படிப்புகளை படிக்க உலக தமிழ் வர்த்தக சங்கம் 1 கோடி ரூபாய் அளவிற்கு கல்வி உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பெரும்தொழிலதிபர்கள் நன்கொடை செய்யவுள்ளனர்.

மாணவர்கள் இந்தக் கண்காட்சியின் மூலமாக உடனடியாக தேர்வு எழுதி கல்வி உதவித் தொகையை பெறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இக்கண்காட்சியில் அரங்கம் அமைக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.

இந்தப் பன்னாட்டு கல்வி கண்காட்சியில் கலந்து கொண்டு இதன் மூலமாக அயல்நாட்டு பல்கலை கழகத்தில் படித்தால் அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலும்போது பகுதி நேர ஊழியராகவும் வேலை செய்து சம்பாதிக்க முடியும்.

இந்தக் கண்காட்சி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, மேலும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கும் நல்வாய்ப்பாக அமையும்.

மேலும் கல்வி கற்க பணம் ஒரு பொருட்டே அல்ல என்ற  சூழ்நிலை உருவாக உலக தமிழ் வர்த்தக சங்கம் முனைப்புடன் செயல்பட உள்ளது.

கல்வி உதவி தொகை மற்றும் சலுகைகள் பெற www.internationaleducationfair.org என்ற  இணையப் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.

மேலும் விவரங்களுக்கு  : 9092475000

edufair16@gmail.com 

Our Score