full screen background image

மீண்டும் சிம்புவின் தாறுமாறு தொடர்கிறது..!

மீண்டும் சிம்புவின் தாறுமாறு தொடர்கிறது..!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு, ஷாமிலி  நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில்  ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் ‘அனேகன்’ படத்தில் இடம் பெற்ற ‘டங்கா மாரி ஊதாரி’  மற்றும் ‘எங்க தல எங்க தல’  பாடல்களை எழுதிய ரோகேஷ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

‘தாறுமாறு தக்காளி சோறு’ என்று தொடங்கும் இந்தப் பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர் கணேஷ் விநாயக், இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இதற்கு இசையமைப்பாளர் டி.இமானும் இசைவு தெரிவித்தார்.

simbu

இந்தப் பாடலின் ஒலிப்பதிவு நேற்று இசையமைப்பாளர் இமானின் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடைபெற்றது. பாடல் முழுவதையும் படித்துப் பார்த்த நடிகர் சிம்பு, “இந்தப் பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும். இதனால் எனக்கும் பெரிய பெயர் கிடைக்கப் போகிறது..” என்று பாராட்டியவர், பாடலை அருமையாக மிகக் குறுகிய நேரத்தில் பாடிக் கொடுத்தாராம்..!

Our Score