full screen background image

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித்தான் இந்த ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படமும் தனக்கான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.

கிரைம்  த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகளை ஒதுக்கித் தந்துள்ளார்.

நல்ல தொழில் நுட்பக் கலைஞர்கள் அமைந்துவிட்டால், படத்தின் கதையோட்டத்தை எளிமையாக மக்களுக்கு உணர்த்திவிடுவார்கள்.

அந்த வரிசையில் படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளை அனல் அரசு, படத் தொகுப்பாளராக ‘அசுரன்’ ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார்.  

‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில்  தயாரித்து வருகிறார்.

இன்றைய கால கட்டத்தில் தினசரி  வாழ்க்கையில் கால்  டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால்  டாக்ஸி  டிரைவரை மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை இது. இந்தக் கால் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

சென்னையில் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி இந்தப் படத்தின் பூஜை நிகழ்வினை நடத்தினார்கள். தொடர்ந்து, தினமும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பையைும் நடத்தி வருகிறார்கள் படக் குழுவினர்.

Our Score