சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடப்பாடி J.ராஜேஷ் அவர்களின் KJR Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்.’
இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.நிர்மல் படத் தொகுப்பு செய்துள்ளார். மேலும் பல்லவி சிங் உடை வடிவமைப்பை செய்ய, D.R.K. கிரண் கலை இயக்கம் செய்துள்ளார். ‘கோலமாவு கோகிலா’ படப் புகழ் இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த லாக் டவுண் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படக் குழு படப் பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியியேலேயே வைத்திருக்கிறது.
‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியான நொடியிலிருந்து இப்போதுவரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்நேரத்தில் ‘டாக்டர்’ படக் குழு மேலும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. இன்று செப்டம்பர் 17 அன்று ‘டாக்டர்’ படக் குழு படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் ஒரு சிறு பூஜையுடன் துவங்கியுள்ளது.
அரசு அறிவித்துள்ள கொரோனா நோய்க்கான, அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும், போதுமான தனி மனித இடைவெளியையும் கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து, டப்பிங் பணிகளை செய்து வருகிறது படக் குழு.