நகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை.’

இந்தப் படத்தை S ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தனசேகர் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில், ஆதேஷ் பாலா, இயக்குநர் பகவதி பாலா, ஷர்மிளா, பிரமோஸ் தாஸ், கண்ணாயிரம், கேபிள் சங்கர், செளந்தர் மேலும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – A.C.அன்பு மாஸ் – முத்து.G., படத் தொகுப்பு - ராம்நாத்(சாய் ஸ்டுடியோ), இணை இயக்கம் - அருங்கால் ரவி, உதவி இயக்குநர்கள் - ஆனந்தன் – யுவன் சதிஷ், மக்கள் தொடர்பாளர் - மதிஒளி குமார், எழுத்து, இயக்கம் – பகவதி பாலா.

இந்த ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்து, தற்போது படத் தொகுப்பு பணிகள் துவங்கியுள்ளன.