full screen background image

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து, தாணு உடனே விலக வேண்டும் – தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து, தாணு உடனே விலக வேண்டும் – தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தயாரிப்பாளரும், திராவிட  முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணு, ஒருதலைப்பட்சமாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்து அனைத்து தயாரிபாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.

சரத்குமாரை நடிகர் சங்க தேர்தலில் கலைப்புலி தாணு ஆதரித்ததற்கான ஒரே காரணம் ‘எஸ்.பி.ஐ. சினிமாஸ்’ உடன் நடிகர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்திற்கும் தாணு அவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்.

அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் சாயம் இருக்க கூடாது, ஆனால் தாணு மூச்சுக்கு மூச்சு தமிழக முதல்வர் பெயரை உச்சரித்து அவரையும் ஏமாற்றி இந்த பதவியில் அமர்ந்து கொண்டு பிரபல நடிகர்களின் கால்சீட்டுகளை வலுக்கட்டயாமாக பெற்று பணம் சம்பாத்தித்து கொண்டிருக்கிறார்.

இவரை போன்ற சுயநல வியாபாரிகள் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

இது ஆரம்பம்தான், இது தொடர்பாக தயாரிப்பாளர் பலருடன் கலந்து ஆலோசித்து அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்பட பாடுபடுவேன்.

குறிப்பு : தாணு முதலில் தி.மு.க வில் இருந்தார், பிறகு ம.தி.மு.க வுக்கு போனார், இப்போது அ.தி.மு.க.வில் இருக்கிறார்,  நாளை ???..”

– இவ்வாறு ஜெ.அன்பழகன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Our Score