பெஸ்ட் ரிலீஸ் என்ற படநிறுவனம் சார்பில் டாக்டர். எஸ்.ஈ.பி.தம்பி மற்றும் எஸ்.மகேஷ் இருவரும் இனணந்து தயாரித்திருக்கும் படம் ‘பள்ளிக்கூடம் போகாமலே.’
இந்த படத்தில் மலையாள நடிகர் அலெக்ஸின் மகன் தேஜஸ் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மற்றும் திலீபன் புகழேந்தி வில்லனாக நடிக்கிறார். மற்றும் கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, ராஜ்கபூர், தேவதர்ஷினி, எ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார்
இசை – சாம்சன் கோட்டூர்
பாடல்கள் – நா,முத்துக்குமார், விவேகா, பி.ஜெயசீலன்
கலை – சிவாயாதவ்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
நடனம் – காதல் கந்தாஸ், ஹபீப், தருண்ராஜ்
தயாரிப்பு – டி.வி.சசி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.ஜெயசீலன்
படம் பற்றி இயக்குநர் ஜெயசீலன் பேசும்போது, “குழந்தைகள் தோல்வி பயத்தால் தற்கொலை முடிவு எடுக்கக் கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் கரு. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை படிப்பதற்காக அவர்களை துன்புறுத்தக் கூடாது. பள்ளிகளும் தங்களது பள்ளி தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண்ணிலும் முதலிடம் எடுக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை துன்புறுத்த கூடாது என்பதுதான் இந்த படத்தின் கதை. பெற்றோர்கள் தவறால் பிள்ளைகள் எப்படி திசை மாறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். படம் இம்மாதம் 30-ம் தேதி வெளியாகிறது…” என்றார்.









