full screen background image

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இந்த மாதம் தடாலடியாக ஒரு முடிவை எடுத்து அமல்படுத்தியிருக்கிறது..!

இதுவரையிலும் சங்கத்தில் இயக்குநர், ம்ற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களாக சேர விரும்புபவர்களின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர்கள் கட்ட வேண்டிய கட்டணத் தொகையை 3 அல்லது 4 தவணைகளாகக் கட்டச் சொல்லி சிறப்பு அனுமதி அளித்திருந்தார்கள்.

அந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொண்ட பலரும் ஒரு குறிப்பிட்ட முன் தொகையை மட்டுமே கட்டிவிட்டு தற்காலிக உறுப்பினர் அட்டையை வாங்கிச் சென்றுவிட்டார்கள். அதன் பின்பு ஓராண்டு, இரண்டாண்டாகியும் சங்கத்து பக்கமே திரும்பிக் கூட பார்க்காமல் இருந்திருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கடிதம் எழுதி மீதப் பணத்தை வசூல் செய்வதற்கு சங்கத்தினரால் இயலவில்லை. பொறுத்திருந்து பார்த்தவர்கள் இதற்கு மேல் பொறுப்பதற்கில்லை என்று நினைத்து, ஏப்ரல் 20-ம் தேதிவரையிலும் மீதமுள்ள பணத்தைத் திருப்பிக் கட்ட வாய்ப்பளித்தார்கள்.

இதற்குள் பணப் பாக்கி வைத்திருப்பவர்கள் கட்டாவிட்டால் அவர்களது தற்காலிக உறுப்பினர் அனுமதியும் ரத்தாகிவிடும். முதல் தவணை பணமும் திருப்பித் தர மாட்டாது என்று அறிவிப்பை வெளியிட்டு.. அவரவர் முகவரிகளுக்கு கடிதமும் அனுப்பிவிட்டார்கள்.

இப்போதும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம்.. சிலர் மட்டுமே வேகம், வேகமாக வந்து பணத்தைக் கட்டியிருக்கிறார்கள். இனிமேலும் பாவம், புண்ணியமெல்லாம் பார்க்கப் போவதில்லை என்று உறுதியுடன் சொல்லும் இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் பணப் பாக்கி வைத்திருக்கும் அனைவரின் உறுப்பினர் சேர்க்கையும் ரத்து செய்யப்படுவது உறுதி என்று இன்றைக்கு அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார்கள்.

இனிமேல் பாருங்க.. ஐயையோ.. இந்தத் தகவலே எனக்குத் தெரியாது.. என் கண்ணுக்கே வரலை.. என்று அழது, அரற்றியபடியே பலரும் சங்கத்துக்கு ஓடி வருவார்கள்..!

Our Score