இன்றைய ‘ஈட்டி’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது இந்தப் படத்தைத் தானே தயாரிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசும்போது, “இந்த ‘ஈட்டி’ படத்தை முதலில் நான்தான் தயாரிப்பதாக இருந்தது. பின்னர் அது தாணு சாரிடம் சென்று கடைசியாக மைக்கேல் ராயப்பன் சாரின் கைக்கு சென்றுள்ளது. நான் தயாரித்திருந்தால்கூட படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்திருக்க மாட்டேன்.
மைக்கேல் ராயப்பன் ஸார், மிகவும் துணிவான தயாரிப்பாளர். நிச்சயமாக படத்தை அவர் வேறு உயரத்துக்கு கொண்டு செல்வார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அவருடன் ஒரு கிரீன் டீ குடித்து கொண்டே ஒரே இரவில், ஒரு பாடலின் கம்போசிங்யை முடித்துவிடலாம்.
நாயகன் அதர்வா இந்தப் படத்துக்கு கொடுத்துள்ள உழைப்பு மிகப் பெரியது. மூன்று நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அருந்தாமல் இருந்தால்தான் சிக்ஸ் பேக் வரும் என்று சொல்வார்கள். நாயகன் அதர்வா தண்ணீர் அருந்தாமல் இந்த படத்துக்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது பாடல் மற்றும் ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.









