full screen background image

“வாலிப வயதில் முரளிக்கு ரசிகனாக இருந்தேன்..” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் பேச்சு..!

“வாலிப வயதில் முரளிக்கு ரசிகனாக இருந்தேன்..” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் பேச்சு..!

இன்று காலை கமலா தியைரங்கில் நடைபெற்ற ‘ஈட்டி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேசும்போது நடிகர் அதர்வாவின் அர்ப்பணிப்புள்ள நடிப்பினை பெரிதும் பாராட்டி பேசினார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேசும்போது, “வழக்கமாக திரைப்படங்களின் முதல் விழா என்றால் அது படத்தின் இசை வெளியீட்டு விழாதான். இப்போது இங்கு நடந்து கொண்டு இருப்பதும் ஒரு இசை விழா. இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

என்னைப் பொறுத்தவரை இந்த படத்துக்கு இரண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். ஒருவர் அத்ர்வா. மற்றொருவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவரை படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் அவருடைய பங்கு மிக பெரியது. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெரும்.

IMG_1077

நான் என்னுடைய வாலிப வயதில் நடிகர் முரளிக்கு மிக பெரிய ரசிகனாக இருந்தேன். இப்போது இந்த தலைமுறைகாரர்களான என்னுடைய மகன் செராபினும், முரளி சாரின் மகன் அதர்வாவும் இனைந்து பணியாற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் அத்ர்வாவின் உழைப்பை கண்டு அசந்துவிட்டேன் படத்துக்காக அவர் கடுமையாக உழைத்து தன்னுடைய சிக்ஸ் பேக்கை உருவாக்கி நடித்துள்ளார். நிச்சயமாக இதற்கான பலன் அவருக்கு கிடைக்கும்..என்றார்.

Our Score