A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், S.N.ராஜராஜன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சவாலே சமாளி.’ இந்தப் படத்தை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான அருண் பாண்டியன் வெளியிடவுள்ளார்.
இந்தப் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்தி தாஸ், வையாபுரி, பறவை முனியம்மா, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.செல்வகுமார், DFT
இசை – எஸ்.எஸ்.தமன்
பாடல்கள் – சினேகன்
கலை – தேவா
நடனம் – தினா
சண்டை பயிற்சி – ‘மிராக்கில்’ மைக்கேல்
எடிட்டிங் – S.அகமது
இணை தயரிப்பு – கீர்த்தி பாண்டியன்.
தயாரிப்பு – கவிதா பாண்டியன், S.N.ராஜராஜன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சத்யசிவா
படம் பற்றி இயக்குனர் சத்ய சிவா பேசும்போது, “இதுவொரு பக்கா கமர்ஷியல் படம் படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகையரும் அந்தந்த கேரக்டர்களாகவே மாறி காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்கள். இந்த படத்திற்காக பதிவு செய்த பாடலான ‘நல்லவனா, கெட்டவனா ஆம்பள; தெரியாமத்தான் தவிக்கிறாடா பொம்பள’ என்ற பாடலை கேட்ட எஸ்.ஜே.சூர்யா ‘இந்த பாடலின் படப்பிடிப்பு எப்போது, எங்கே நடந்தாலும் சொல்லுங்க.. நான் வந்து பார்க்கணும்..’ என்றார்.
அதே மாதிரி அசோக்செல்வன் – ஜெகன் – ஐஸ்வர்யா நடித்த அந்த பாடல் மகாபலிபுரம் அருகே எடுக்கப்பட்டபோது. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வந்திருந்து படப்பிடிப்பை பார்த்து பாடலையும், படமாக்கப்பட்ட விதத்தையும் பாராட்டிவிட்டுச் சென்றார்.
நடிகை லஷ்மியின் மகள் ஐஸ்வர்யா முதன் முதலாக இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். வரும் செப்டம்பர் 4 ம் தேதி உலகமெங்கும் இந்தப் படம் வெளியாகிறது..” என்றார் இயக்குனர் சத்யசிவா.