full screen background image

“நான் இயக்கிய படங்களில் சிறப்பானது மாவீரன் கிட்டுதான்…” – இயக்குநர் சுசீந்திரனின் பெருமிதப் பேச்சு..!

“நான் இயக்கிய படங்களில் சிறப்பானது மாவீரன் கிட்டுதான்…” – இயக்குநர் சுசீந்திரனின் பெருமிதப் பேச்சு..!

‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன், விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, தயாரிப்பாளர் IceWear சந்திரசாமி, D.N. தாய் சரவணன், இசையமைப்பாளர்  இமான், ஒளிப்பதிவாளர் A.R. சூர்யா, எழுத்தாளர், கவிஞர் யுகபாரதி மற்றும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அம்மா கிரியேஷன் டி.சிவா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாண்டிராஜ், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

img_9370

விழாவில் கவிஞர் யுகபாரதி பேசும்போது, “இந்த ‘மாவீரன் கிட்டு’ திரைப்படம் எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான படம், இப்படத்தில் நான் முதன் முறையாக வசனம் எழுதியுள்ளேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் எனக்கு  மிக முக்கியமான திரைப்படம். இப்படம் தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக இருக்கும்.

நான் இசையமைப்பாளர் டி. இமான் அவர்களுடன் தினமும் பேசிவிடுவேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப் பெரிய மகிழ்ச்சியான விஷயம். நான் எதிர்காலத்தில் வாய்ப்பு வந்தால் திரைக்கதை எழுத்தாளராகவும் மாறவுள்ளேன். நான் திரைக்கதை எழுதினால் தயாரிப்பாளர் சந்திரசாமி அவர்களின் படத்துக்குத்தான் முதலில் எழுத வேண்டும் என்று தயாரிப்பாளர் சந்திரசாமி கேட்டுள்ளார். வருங்காலத்தில் எனக்கு பாடல், வசனம், திரைக்கதை எழுத வாய்ப்பு ஒன்றாக வந்தால் நிச்சயம் சாதிப்பேன்..” என்றார்.

img_9176

விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையாகும். இப்படம் தென்னகத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவத்தை பற்றிப் பேசும் படம்.

இயக்குநர் சுசீந்தரனை எல்லோரையும்போல் எனக்கும் மிகவும் பிடிக்கும். நாங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால்கூட அவர்தான் எங்களுக்கு ஆர்டர் செய்வார். அந்த அளவுக்கு எங்கள் மேல் அவருக்கு உரிமை அதிகம் உண்டு.

இயக்குநர் சுசீந்திரன்தான் தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்து மிகவும் வேகமாக படத்தை இயக்கி முடிக்கும் இயக்குநர். எனக்கு அவருடைய வேகம் மிகவும் பிடிக்கும். ‘மாவீரன் கிட்டு’ தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமான திரைப்படம். அது நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார்.

susheendhiran-sandhrasamy

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச் சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இந்தப் படத்துக்கு தன் இதயத்தில் இருந்து பாடல்களை தந்துள்ளார்.

எனக்கு நடிகர் பார்த்திபனைவிட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவர் உலக நாயகன் கமல்ஹாசனை போல் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில்தான் முதலீடு செய்பவர்.

விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். விஷ்ணு விஷாலுடன் நான் இதுவரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன்.  நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

‘வெண்ணிலா கபடி குழு’ படத்துக்கு பின்னர் இந்தப் படத்துக்காக விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடங்களுக்கு பிறகு அதே கணக்கம்பட்டி ஊருக்கு சென்றிருந்தேன். அங்கு மக்கள் எங்களை நன்றாக நியாபகம் வைத்து எங்களுடன் பேசி படபிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பிரச்சினையின்றி நடக்க மிக முக்கிய காரணமாக இருந்த என் தம்பி தாய் சரவணனுக்கு நன்றி. அவர்தான் அனைவரையும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பு நடக்க பெரிதும் உதவினார்.

‘மாவீரன் கிட்டு’ நான் இதுவரையிலும் இயக்கிய படங்களில் மிகச் சிறந்த படமாகவும், கமர்ஷியலாக வெற்றி பெறும் படைப்பாகவும் இருக்கும்…” என்றார்.

Our Score