ஜனவரி 15 முதல் களமிறங்கக் காத்திருக்கும் இயக்குநர் சேரனின் C2H திட்டம்..!

ஜனவரி 15 முதல் களமிறங்கக் காத்திருக்கும் இயக்குநர் சேரனின் C2H திட்டம்..!

இயக்குநர் சேரன் தான் துவக்கியுள்ள C2H என்னும் புதிய நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றியும், தான் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் நேற்றைய பிரஸ்மீட்டில் வெளியிட்டார்.

மிக விரிவாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது நிறுவனம் பற்றியும் அதன் செயல்பாடுகளை பற்றியும் இயக்குநர் சேரன் பத்திரிகையாளர்களிடத்தில் எடுத்துரைத்தார்.

அவைகளின் தொகுப்பு இங்கே :

C2H – DVD BAZAAR

• C2H நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய கணக்கெடுப்பின்படி 64 சதவீதம் பேர், இந்த C2H நிறுவனத்திற்கு ஆதரவையும், புதிய திரைப்படங்களின் DVD-களை வீடுகளில் வாங்குவதற்கான உறுதியையும் அளித்துள்ளனர்.

• தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியான அன்றே விநியோகம் செய்ய DVD பஜார் அமைப்பு மூலம் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலும், வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் இதுவரையிலும் தமிழகம் முழுவதிலும் 154 விநியோகஸ்தர்கள் மற்றும் 5000 முகவர்கள்(DEALERS) நியமிக்கப்பட்டுள்ளனர். 

• C2Hன் முதல் வெளியீடான ‘ஜேகே எனும் நண்பனி்ன்’ வாழ்க்கை திரைப்படம் வரும் 2015 ஜனவரி 15-ம் நாள் பொங்கல் தினத்தன்று வெளியாகும்.

• இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 75 திரையரங்குகளில் வெளியாகும். வெளியான அன்றே இத்திரைப்படம் DVD-யிலும் சட்டப்படி உரிமம் பெற்று வெளியாகும்.

• எங்களது கணக்கெடுப்பினை கருத்தில் கொண்டு, ‘ஜேகே எனும் நண்பனின்’ வாழ்க்கை திரைப்படத்தின் முன் கூட்டிய விற்பனைக்கான இலக்கிற்காக மக்களிடம்(PRE ORDER) வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறோம்..

• C2Hல் வெளியாகும் திரைப்படங்களின் DVD மேலுறை வடிவமைப்பினை இன்று மக்களிடமும், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் வெளியிடுகிறோம்..

• C2H டிவிடி பஜார் நிறுவனத்தின் ஐயாயிரம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை, கோயம்புத்தூர், சேலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, போன்ற ஒவ்வொரு மண்டலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

• முகவர்களுக்கான அடையாள அட்டை, கைப்பை, அனுமதி கடிதம் போன்றவற்றை C2H நிறுவனமே நேரடியாக வழங்க இருக்கிறது..

C2H – SET TOP BOXES 

• C2H நிறுவனம் புதிய திரைப்படங்களை SET TOP BOX மூலமாகவும் கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் டெல்லி போன்ற இடங்களிலும் வெளியிடுகிறது.

C2H – ABROAD 

• C2Hல் வெளியாகும் திரைப்படங்களை குறைவான, சரியான விலையில் உலகளாவிய மக்களுக்கும் சட்டப்படி, சரியான முறையில் உயர் தர வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் (1080P, 5.1) கொண்டு செல்ல ONLINE/ IPTV / OTT போன்ற தளங்களையும் நிறுவியுள்ளது.

NEXT RELEASES IN C2H 

1.  ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

தயாரிப்பு : DREAM THEATRES

இயக்கம்  : சேரன்

இசை  :  ஜி வி பிரகாஷ்குமார்

நடிப்பு  :  சர்வா, நித்யா, பிரகாஷ்ராஜ், சந்தானம்

2. அர்ஜுனன் காதலி

தயாரிப்பு  :  SS MOVIE MAKERS, SIVASAKTHI PANDIAN 

இயக்கம்  :  பார்த்தி பாஸ்கர்

இசை  :  ஸ்ரீ காந்த் தேவா

நடிப்பு  :  ஜெய், பூர்ணா

3. கோடிட்ட இடங்களை நிரப்புக

தயாரிப்பு  :  NIKKI PRODUCTIONS

இயக்கம்  :  பாலன்

நடிப்பு  :  புதுமுகங்கள்

4. வாராயோ வெண்ணிலாவே

தயாரிப்பு  :  ABHISHEIK FILMS

இயக்கம்  :  சசிதரன்

இசை  :  கார்த்திக் ராஜா

நடிப்பு  :  அட்டகத்தி தினேஷ், ஹரி ப்ரியா

5. அப்பாவின் மீசை

தயாரிப்பு  :  DHAMINI CINEOGRAPHY

நடிப்பு  :  பசுபதி, சேரன், நாசர், நித்யா மேனன்

இயக்கம்  :  ரோகினி

ஒலிப்பதிவு :  ரசூல் பூக்குட்டி

இசை  :  அச்சு

C2H நிறுவனத்தின் சட்ட ஆலோசனை குழு

NRSP LAW FORCE  –  Mr.Raja Senthoora Pandian and team 

HSB ASSOCIATES  –  Mr. Hari Shankar and team

C2H திரைப்பட தேர்வு குழு 

ஞானவேல் – தயாரிப்பாளர்

ராஜவேலு – வழக்கறிஞர்

சமுத்திரகனி – இயக்குநர்

சசி – இயக்குநர்

தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர்

சித்ரா லக்ஷ்மணன் – இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்

சுப்ரமணியசிவா – இயக்குநர்

S ராமகிருஷ்ணன் – எழுத்தாளர்

அகத்தியன் – இயக்குநர்

அனுபமா குமார் – நடிகை

• C2H விளம்பர திட்டம்

சுவரொட்டிகள், கட்டிட விளம்பரப் பலகைகள் (ACROSS 240 PLACES IN TAMIL NADU), சிற்றுந்து விளம்பரங்கள், வானொலி மற்றும் இணையதள விளம்பரங்கள் மூலம் C2H தனது திரைப்படங்களை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Our Score