“நடிகை ராதிகாவின் பேச்சு அநாகரிகமானது” – கண்டிக்கிறார் ‘உயிரே உயிரே’ இயக்குநர் ஏ.ஆர்.ராஜேசகர்

“நடிகை ராதிகாவின் பேச்சு அநாகரிகமானது” – கண்டிக்கிறார் ‘உயிரே உயிரே’ இயக்குநர் ஏ.ஆர்.ராஜேசகர்

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ‘உயிரே உயிரே’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதிகா “இங்கே தமிழ்நாட்டில் இன்றைய இளம் நடிகர்களிடையே ஒற்றுமை இல்லை…” என்கிற ரீதியில் பேசியிருந்தார்.

radhikaa-1

அந்தச் செய்தி இந்தத் தளத்தில் உள்ளது.

நடிகை ராதிகா தன்னுடைய சுயநலத்திற்காக, நடிகர்சங்கப் பிரச்சினையை பற்றி பேசுவதற்காக தனது திரைப்படத்தின் மேடையை பயன்படுத்திக் கொண்டதாக அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து இன்று வெளியான ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டி இது :

“ராதிகா பேசுனது அவங்க சொந்தக் கருத்து. அதில்  எனக்கு உடன்பாடில்லை. இந்த விழாவில் விஷாலை மனதில் வைத்துக் கொண்டு விமர்சிப்பதுதான் அவங்க நோக்கமா இருந்திருக்கணும். இல்லேன்னா இங்கே அவங்க பேசியதை முதல் நாள் இரவு நடந்த பிலிம்பேர் விழாவிலேயே பேசியிருக்கலாமே..?

அவங்க சொல்ற மாதிரியில்ல.. இன்று இளம் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளனர். விக்ராந்த் என்ற நண்பனுக்காக விஷால், ஆர்யா, ஜெயம் ரவியெல்லாம் சம்பளமே வாங்காமல் ஆடி கொடுக்குறது இப்பத்தானே..? பார்த்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் படத்தில் ஏழு பெரிய ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பைசாகூட வாங்காமல் நடிச்சுக் கொடுத்தாங்களே..? அது ராதிகா ஹீரோயினா நடிச்ச காலத்தில் நடந்திருக்கா..?

கார்த்தி ஒரு கதை கேட்டு அது தனக்குப் பொருத்தமா இல்லைன்னா ஆர்யாவுக்கு போன் போட்டு அந்தக் கதையை கேட்க வைக்கிறார். நடிகர் சங்கப் பிரச்சினையை மறைமுகமாக பேசுவதற்காக எங்க மேடையைப் பயன்படுத்தியிருக்கிறார் ராதிகா. இது ரொம்ப அநாகரிகமானது.

பாலிவுட் உச்ச நட்சத்திரமான அனில் கபூர் தமிழகத்தில் நடக்கும் ஒரு விழாவுக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். அவர் முன்னாலேயே நம்ம தமிழ்நாட்டு நட்சத்திரங்களை அசிங்கப்படுத்துறது நம்ம மேல நாமளே எச்சில் திப்பிக்கிறதுக்கு சம்மானதுதானே..?” என்று சொல்லியிருக்கிறார்.

இதுக்குப் பேருதாங்க ஒற்றுமை இல்லைன்னு சொல்றது..? 

Our Score