full screen background image

“நான் நடிச்சா படம் வியாபாரம் ஆகுமா..?” – இயக்குநர் ராஜகுமாரன் கேட்ட கேள்வி..!

“நான் நடிச்சா படம் வியாபாரம் ஆகுமா..?” – இயக்குநர் ராஜகுமாரன் கேட்ட கேள்வி..!

இன்று மாலை நடைபெற்ற ‘கடுகு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராஜகுமாரன் மிக இயல்பாக பேசி பலத்த கை தட்டலை வாங்கினார்.

நடிகர் ராஜகுமாரன் பேசுகையில், “மிகுந்த மகிழ்ச்சியாகவும்,  பிரமிப்பாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த படத்தோட  ஆரம்ப கட்டமும், இதோட பயணமும்,  இப்ப 24-ம் தேதி ரிலீஸ் என்று வந்திருப்பதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

IMG_4479

என்னை இந்த படத்துல நடிக்க விஜய் மில்டன் சார் கூப்பிட்டபோது, ‘நான் நடிக்கிறதெல்லம் சரி சார்.. படம் வியாபாரம்  ஆகுமா?’ என்றேன். அப்ப அவர் சொன்னது, ‘ராஜகுமாரன் சார்,  மொதல்ல நம்மளை நாமதான் நம்பணும். நம்மை நாமளே நம்பாம… மத்தவங்க நம்பனும் என்று எதிர்பார்த்தால் எப்படி? எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.  அந்தக் கதைய நான் எடுக்குறேன்..  நீங்க நடிக்கிறீங்க. அவ்வளவுதான்… நான் உங்களை முழுசா நம்புறேன். நீங்களும் உங்கள நம்பணும்..’ என்றார். 

பிறகு அவருக்கு முழுசா சப்போர்ட் பண்ணனும் என்று நினைத்தேன். சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு போய்விடுவேன். இந்த மாதிரிதான் நான் சப்போர்ட் பண்ணினேன். மற்றபடி எல்லாமே அவர்தான் செய்தார். அவரோட நம்பிக்கைதான் ஜெயிச்சிருக்கு.

இதுவொரு மேஜிக் மேடை போல தெரிகிறது. படத்த பார்த்ததும் சூர்யா சார் எனக்குப் பிடிச்சிருச்சி என்று சொன்னார். சூர்யா சார் இந்த படத்த விட்டுவிடக் கூடாது. அந்த அளவுக்கு படத்தில் விஷயம் இருக்கு என்றாராம். விஜய் மில்டனின் நம்பிக்கை ஜெயிச்சிருக்கு. அதனால் இது ஒரு மேஜிக்தான்.

என்னோடு  நடித்த இளம் நாயகன் பரத், எந்த காம்ப்ளக்ஸும் இல்லாமல் என்னோடு நடித்தார். சுபிக்‌ஷா, ராதிகா பிரசித்தா, ஏ.வெங்கடேஷ் சார் இவங்கள்லாம் என்கூட சிறப்பா நடிச்சிருக்காங்க.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஸார், மிக சிறந்த நல்ல இயக்குநர் நல்ல மனிதர். அவரோடு பணியாற்றும்போதும் நிறைய கற்றுக் கொண்டேன். அவரோட ஒரு சீன்ல நடிச்சேன். அந்த சீனுக்கு அவர் டப்பிங் பேசியபோது, நானும் டப்பிங்  பேச போயிருந்தேன்.  அப்போதுதான் தெரிந்தது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று..!

ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் சார், அவருக்கு என்ன வித்தை தெரியுமோ அதையெல்லாம் என் மீது திணித்து என்னை வேறு மாதியாக மாற்ற முயற்சி செய்தார். புலி மாஸ்டர் செந்தில், ஆர்ட் டைரக்டர் ஜனா அவரது பணியும் சிறப்பாக இருந்தது. ரொம்பவே எதார்த்தமாக இருந்தது.  அது ஒரிஜினலோ என்று நினைக்கும்படிதான் இருந்தது. இந்தப் படத்தை வெளியிடும் சூர்யா சாருக்கு ரொம்ப நன்றி. விரைவில் வெற்றி விழாவில் சந்திப்போம், நன்றி…” என்றார் ராஜகுமாரன்.

Our Score