full screen background image

“மணிரத்னம் தந்த ஏமாற்றம்” – இயக்குநர் பொன்ராமின் வருத்தம்

“மணிரத்னம் தந்த ஏமாற்றம்” – இயக்குநர் பொன்ராமின் வருத்தம்

‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் தனது கதையை இயக்குநர் மணிரத்னம் நிராகரித்தது தனக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் பொன்.ராம்.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இருவரும் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஓடிடி தளத்திற்காகத் தயாரித்திருந்தனர்.

9 நவரசங்களையும் குறிக்கும் வகையில்  உருவான 9 கதைகளை வைத்து 9 இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள்.

இதில் ‘காமெடி’ என்ற ரசத்தை வைத்து உருவாகும் கதையை இயக்குநர் பொன்.ராம்தான் முதலில் இயக்கியிருந்தார். ஆனால் திடீரென்று பொன்.ராமிற்கு பதில் ப்ரியதர்ஷன் இயக்கிய படம் வெளியானது.  

இது குறித்து பேசிய பொன்ராம், “நவரசா’ ஆந்தாலஜியில் என்னுடைய படம் ஒளிபரப்பாகாதது எனக்குப் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. உண்மையான காரணம் என்னவென்று தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும்.

நான் கேட்டபோது உங்களுடைய படத்தின் ஆடியோவில் பிரச்சினை இருப்பதாக மணி சார் சொன்னார். ஆனால், அந்த விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை.

நான் இயக்கிய படம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே அதில் உண்மையாக உழைத்திருந்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம்…” என்றார்.

பொன்.ராம் இயக்கிய இந்தக் காமெடி படத்தில் கெளதம் கார்த்திக் நடித்திருந்தார்.  நவரசா’விற்காக மட்டுமே இந்தப் படம் உருவாக்கப்படுவதாக ஒப்பந்தம் இருப்பதால் வேறு ஓடிடி தளத்திற்கு இந்தப் படத்தை விற்கவும் முடியவில்லை என்பது சோகமான விஷயமாகும்.

 
Our Score