நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் மனித நேய மன்றத்தின் சார்பில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ‘மனக்களிம்பு’ என்கிற பெயரில் நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாம் வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கத்தி்ல இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகை சுஹாசினி, நடிகர் ஆர்யா, மயில்சாமி மற்றும் பெருவெள்ளத்தின் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள், தன்னார்வலத் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரத்த தானம் வழங்கினார்கள். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
Our Score