ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘தர்ம துரை’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். சீனு ராமசாமி எழுதி, இயக்குகிறார்.
சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது இது மூன்றாவது முறை. ஏற்கெனவே விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தையும். தற்போது ரிலீஸுக்குக் காத்திருக்கும் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தையு்ம் சீனு ராமசாமியே இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கியது..!