இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது..!

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது..!

இன்று காலையில் சென்னையில் காலமான தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரான மகேந்திரனின் உடல் இன்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக பள்ளிக்கரணையில் இருக்கும் மகேந்திரனின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மகேந்திரனின் உடலுக்கு, திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

mahendiran-john

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சசிகுமார், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், தலைவாசல் விஜய், விவேக், மோகன், ஆர்.எஸ்.சிவாஜி, கருணாகரன், பாபி சிம்ஹா, மோகன் ராம், ‘இசைஞானி’ இளையராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், யார் கண்ணன், விக்ரமன், சண்முகசுந்தரம், ரமேஷ் கண்ணா, அமீர், கரு.பழனியப்பன், ஷங்கர், பாலா, மணிரத்னம், அஜயன் பாலா, சந்தான பாரதி, அகத்தியன், திரு, வீ.சேகர், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், லெனின் பாரதி, மாரி செல்வராஜ், S.S.ஸ்டான்லி, வெற்றி மாறன், பிரியதர்ஷன், பொன்வண்ணன், சேரன், பாடலாசிரியர் பிருந்தா சாரதி, நடிகைகள் ரேவதி, சுஹாசினி மணிரத்னம், ராதிகா, வரலட்சுமி சரத்குமார், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, எஸ்.ஆர்.பிரபு, தயாநிதி அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரான வேல்முருகன், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ராம், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், ஒளிப்பதிவாளர் சஞ்சய் லோக்நாத், திண்டுக்கல் லியோனி மற்றும் பல்வேறு திரைப்பட சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலை 4.30 மணிக்கு மகேந்திரனின் உடல் தாங்கிய பெட்டி, அலங்கரிக்கப்பட்ட காரில் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி பிரார்த்தனைக்காக மந்தைவெளியில் இருக்கும் சர்ச்சுக்கு கொண்டு வரப்பட்டது.

mahendiran-funeral-2

mahendiran-funeral-1

பிரார்த்தனைக் கூட்டம் முடிந்த பிறகு இயக்குநர் மகேந்திரனின் பூதவுடல் மந்தைவெளி செயிண்ட் மேரீஸ் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Our Score