நடிகர் கமல்ஹாசன் இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்யவிருப்பதாக லிங்குசாமியே தெரிவித்துள்ளார்.
இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘பிகினிங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் லிங்குசாமி பேசும்போது இதைத் தெரிவித்தார்.
இயக்குநர் லிங்குசாமி இது குறித்து பேசும்போது, “உத்தம வில்லன்‘ படத்தை திறமையாக, கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால், அப்படம் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் முதலில் முடிவெடுத்தது ‘பாபநாசம்’ படத்தைத் தயாரிக்கத்தான். ஆனால், கமல் சார் ஆசைப்பட்டதால் ‘உத்தம வில்லன்‘ படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். ‘உத்தம வில்லன்‘ படத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய கமல் சார் எங்களுக்கு ஒரு படம் செய்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்…” என்றார்.









