பிரசாந்த் படத்திற்கு இயக்குநர் சிக்கிட்டார்..!

பிரசாந்த் படத்திற்கு இயக்குநர் சிக்கிட்டார்..!

நடிகர் பிரசாந்த்தின் நடிப்பில் தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் படத்தில் இருந்து இயக்குநர் மோகன்ராஜா விலகிவிட்டார் என்று நேற்றைக்குத்தான் நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இன்றைக்கு அது உண்மையாகிவிட்டது.

மோகன்ராஜாவுக்குப் பதிலாக இயக்குநர் ஜெ.ஜெ.பிரடெரிக் ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஜெ.ஜெ.பிரடெரிக், ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கியவராவார்.

2018-ம் ஆண்டு வெளியான ‘அந்தாதூன்’ திரைப்படம் வெறும் 32 கோடியில் தயாரிக்கப்பட்டு 457 கோடி ரூபாயை உலகம் முழுவதும் சம்பாதித்தது. இந்தப் படத்தின் தமிழ் மொழியாக்க உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் தியாகராஜன், இப்போது இந்தப் படத்திற்கான நாயகி வேட்டையை மீண்டும் துவக்கியிருக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்..!

Our Score