full screen background image

2019-ம் ஆண்டிற்கான சிறந்த மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசு விருதுகள் அறிவிப்பு..!

2019-ம் ஆண்டிற்கான சிறந்த மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசு விருதுகள் அறிவிப்பு..!

2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களுக்கான கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது கேரளா அரசு வழங்கும் ‘50-வது ஆண்டு அரசு விருதுகள்’ என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா அரசு வருடந்தோறும் வழங்கும் திரைப்படங்களுக்கான அரசு விருதுகளை அம்மாநில கலாச்சார அமைச்சர் ஏ.கே.பாலன் நேற்று வெளியிட்டார்.

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு சென்ற வருடம்தான் 119 படங்கள் போட்டிக்கு வந்திருந்தன.

நடுவர் குழுவின் தலைவராக பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பட் தலைமையேற்றார். மற்ற நடுவர்களாக இயக்குநர்கள் சலீம் அஹமத். அப்ரிட் ஷைன், ஒளிப்பதிவாளர் விபின் மோகன், நடிகை ஜோமோள், படத் தொகுப்பாளர் எல்.பூமிநாதன், எழுத்தாளர் பெனிஅமீன் போன்றோர் இருந்துள்ளனர்.

விருதுகள் விவரம் :

சிறந்த திரைப்படம் – வாசந்தி

சிறந்த 2-வது திரைப்படம் – கென்ஜிரா

சிறந்த இயக்குநர் – லிஜா ஜோஸ் பெல்லிச்சேரி (ஜல்லிக்கட்டு)

சிறந்த நடிகர் – சூரஜ் வஜ்ரமூடு (ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், வைகுர்தி)

சிறந்த நடிகை – கனி குருதி (பிரியாணி)

சிறந்த துணை நடிகர் – பகத் பாஸில் (கும்பிளாங்கி நைட்ஸ்)

சிறந்த துணை நடிகை – சுவாசிகா விஜய் (வாசந்தி)

சிறந்த இசை – சுஷின் ஷ்யாம் (கும்பளாங்கி நைட்ஸ்)

சிறந்த திரைக்கதை – ஷாகுல் அலியார் (வாசந்தி)

சிறந்த பின்னணிப் பாடகர் – நஜீம் அர்ஷத்

சிறந்த பின்னணிப் பாடகி – மது நாராயணன்

சிறந்த கலை இயக்குநர் – ஜோதிஸ்

சிறந்த ஒலி வடிவமைப்பாளர் – மாதவன் நாயர்

சிறந்த ஜனரஞ்சக திரைப்படம் – கும்பளங்கி நைட்ஸ்

சிறந்த அறிமுக இயக்குநர் – ரத்தீஷ் பொடுவில் (ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25)

சிறந்த கிராபிக்ஸ் டிஸைன் – நடுவர் விருது – சித்தார்த் பிரியதர்ஷன் (மரைக்காயர் – அரபிக் கடலிண்டே சிம்ஹம்)

சிறந்த இசையமைப்பாளர் – சிறப்பு நடுவர் விருது – வி.தட்சிணாமூர்த்தி (ஷ்யாமாராகம்)

சிறந்த நடிகர் – சிறப்பு நடுவர் விருது – நிவின் பாலி (மூத்தோன்)

சிறந்த நடிகை – சிறப்பு நடுவர் விருது – அன்னா பென் (ஹெலன்)

சிறந்த நடிகர் – சிறப்பு நடுவர் விருது – பிரியம்வதா கிருஷ்ணன் (தொட்டப்பன்)

Our Score