பிரபல சினிமா இயக்குநர் குருதனபால் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
‘உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்’, ‘தாய் மாமன்’, ‘மாமன் மகள்’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘பெரிய மனுஷன்’, ‘சுயேட்சை எம்.எல்.ஏ.’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார் குருதனபால்.
2006-ல் வெளியான சுயேட்சை எம்.எல்.ஏ. படம் சரியாகப் போகாததினாலும், அதன் பின் பட வாய்ப்புகள் கிடைக்காததினாலும் சோர்வுற்றிருந்த குருதனபால் சென்னையில்தா்ன் தங்கியிருந்தார். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும் சூழலில் அவருடன் இருந்த உதவி இயக்குநர்கள்தான் அவரை கவனித்துக் கொண்டார்கள்.
ஒரு வாரத்திற்கு முன்பு கோவைக்குச் சென்ற அவருக்கு அங்கேயே உடல்நலமில்லாமல் போக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்ட்டார். அங்கே சிகிச்சை பலனிக்காமல் காலமாகவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகர் சத்யராஜ்தான் கோவையில் அவரைக் கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
அன்னாருக்கு எமது அஞ்சலிகள்..!