2014, ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை ரிலீஸான தமிழ்த் திரைப்படங்கள்
1. தெனாலிராமன்
3 வருட கால காத்திருப்புக்குப் பின் வைகைப் புயல் வடிவேலு நடித்து வெளியாகியிருக்கும் படம் இது. ஏஜிஎஸ் புரொடெக்சன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், வடிவேலுவின் படம் என்பதாலும் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டு.
2. டமால் டுமீல்
கேமியோ மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
3. கற்பவை கற்றபின்
பட்டுராம் புரொடெக்சன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பட்டுராம் செந்தில் இயக்கியிருக்கிறார். இதில் மது ஹீரோவாக நடித்திருக்கிறார். அபிநிதா ஹீரோயின். மற்றும் செந்தி, சிங்கம்புலி, வாசுவிக்ரம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்திரவர்மன் இசையமைத்திருக்கிறார்.
4. தலைவன்
மன்னார்குடி கரன்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஜெஜெ டிவி பாஸ்கரன் இதில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். சொ்ந்தப் படமும்கூட.. வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். ஆண்ட்டனி எடிட்டிங். எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கிறார்.
இது தவிர டார்ஜான் என்ற ஆங்கில படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 3-D தொழில் நுட்பத்தில் வெளியாகிறது.













