full screen background image

இயக்குநர் பாலுமகேந்திரா நினைவு குறும்படப் போட்டி..!

இயக்குநர் பாலுமகேந்திரா நினைவு குறும்படப் போட்டி..!

நண்பர்களே…!

இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19-ம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. 

விருதுத் தொகை: ரூபாய் 25,000/-

தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு இயக்குநர் பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும்,  பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

கலந்து கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு அதிலிருந்து ஒரேயொரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். 

விதிமுறைகள் : 

பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- ‘PADACHURUL’ என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD-யாகவோ, காசோலையாகவே கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும்.

குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம். 

குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி.யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.

குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

குறும்படங்கள் 01.01.2011-க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.

விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படமாட்டாது.

ஆவணப் படங்கள்(Documentary Films), அனிமேசன் படங்கள்(Animation Films) ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

பரிசுகள் பாலுமகேந்திராவின் பிறந்த தினமான மே 19-ம் தேதி, (மே 19 வேலை நாளாக இருந்தால், அதற்கடுத்து வரும் வார இறுதி நாளில் வழங்கப்படும்)

விருதுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 09, 2016

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

விதை,

1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ்,

காந்தி நகர் முதல் குறுக்குத் தெரு,

அடையார்,

சென்னை 600020.

Our Score