“படத்தை என்ன வேண்ணாலும் செஞ்சுக்குங்க…” – இயக்குநர் பாலாவின் பதிலடி..!

“படத்தை என்ன வேண்ணாலும் செஞ்சுக்குங்க…” – இயக்குநர் பாலாவின் பதிலடி..!

தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்திருக்கும் தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ திரைப்படம் தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்பதால் மீண்டும் வேறொரு இயக்குநரை வைத்து படத்தை உருவாக்கப் போவதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான E-4 Entertainment நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

varma-movie-poster-1

இது பற்றி இயக்குநர் பாலா இப்போது தன் தரப்பு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதில், 

பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு :

‘வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி, ‘வர்மா’ படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.

கடந்த ஜனவரி மாதம் 220ம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…

துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை.

பாலா”

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்காக இயக்குநர் பாலா தயாரிப்பாளரிடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

அந்த ஒப்பந்தப்படி,

“எடுத்துக் கொடுத்திருக்கும் படத்தை தயாரிப்பாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். கூட்டலாம். குறைக்கலாம். கூடுதல் காட்சிகளை சேர்க்கலாம். அல்லது புதிதாகவே எடுக்கலாம். ஆனால், படத்தின் எந்தவொரு இடத்திலும் தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது…” என்று அந்த ஒப்பந்தத்தில் பாலா குறிப்பிட்டிருக்கிறார்.

bala-statement-1

bala-statement-2

bala-statement-3

Our Score