full screen background image

இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு கிடைத்த பாராட்டு..!

இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு கிடைத்த பாராட்டு..!

Action king அர்ஜுன் நடிக்கும் 150-வது படம் ‘நிபுணன்’. இந்தப் படத்தில் இவருடன் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.

அருண்  வைத்தியநாதன்  இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற  வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிக குறுகிய காலக் கட்டத்தில்  ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது.

அறிமுக இசை அமைப்பாளர் நவீனின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்த  பாடலை தனது ட்விட்டர் மூலம் மிகவும் பாராட்டி உள்ளார் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி. அந்த பாடலை தான் இயற்றவில்லை என்றாலும், அந்த பாடலை இயற்றிய மற்றொரு கவிஞரை மனதார பாராட்டி உள்ளதை திரை உலகம் மனதார வரவேற்று உள்ளது. இந்த பாடலை எழுதியவர் படத்தின் இயக்குநரான அருண் வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. 

“மதன் கார்க்கியின் இந்த நல்ல குணமே அவரை இந்த இளம் வயதில் உச்சத்தில் உட்கார வைத்து உள்ளது. அறிமுகம் இல்லாத இன்னொருவர் இயற்றிய பாடலை ஒரு பாடல்  ஆசிரியர் பாராட்டுவது, நமது கலாச்சாரத்தை ஒட்டியுள்ள நல்ல குணநலனை பிரதிபலிக்கிறது.

போட்டிகள் நிறைந்த இந்த படவுலகில் இவரை போன்ற  இளைஞர்கள் இத்தகைய நட்பு  மனப்பான்மை  போற்றுவது எதிர்கால சினிமாவுக்கு நல்லது” என மகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குநரும், பாடலாசிரியருமான அருண் வைத்தியநாதன்.

 

Our Score