full screen background image

இளையராஜாவின் இசையில் ஸ்ரீகாந்த் – சிந்தியா நடிக்கும் ‘தினசரி’ திரைப்படம்!

இளையராஜாவின் இசையில் ஸ்ரீகாந்த் – சிந்தியா நடிக்கும் ‘தினசரி’ திரைப்படம்!

500 படங்களுக்கு மேல் பத்திரிக்கை தொடர்பாளராக பணியாற்றியவரும், 6 நேரடி தமிழ் திரைப்படங்களை தயாரித்தவருமான என்.விஜயமுரளி தமது மகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தினசரி’.

இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அமெரிக்க மங்கையான சிந்தியா லெளர்டே நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘இசைஞானி’ இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும், பாலமுருகன் – சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார் இயக்குநர் சங்கர் பாரதி .

படம் பற்றி இயக்குநர் சங்கர் பாரதி பேசும்போது, “மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறுவிறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்.

‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் முதல் பட இயக்குநர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெண்டில் இப்பொழுது நானும் இணைகிறேன். எனக்கு இதுதான் முதல் படம், இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என் படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்…” என்றார்.

இந்த ‘தினசரி’ படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களை, மிகப் பெரும் பொருட் செலவில் அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர்.

இந்த ‘தினசரி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Our Score