full screen background image

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் எம்.தேவராஜுலு வழங்கும், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண்  நடித்திருக்கும் ‘டீசல்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது..!

இந்த ’டீசல்’ படத்தில் அதுல்யா ரவி, பி. சாய்குமார், எஸ் கருணாஸ், வினய் ராய், அன்னயா, ஜாகீர் உசேன், சச்சின் கெடேகர், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, என், தீனா (தினேஷ்), தங்கதுரை கே, லட்சுமி சங்கர், எஸ். தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார். எஸ், போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பேனர் – தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர் – எம்.தேவராஜுலு, எழுத்து,  இயக்கம் – சண்முகம் முத்துசாமி, இசை – திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ்.பிரபு, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – ரெம்பன், சண்டை இயக்கம் – செல்வா மற்றும் ராஜசேகர், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், ஷோபி, ஷெரீப், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான், தயாரிப்பு – எஸ்.பி.சினிமாஸ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

ஹரிஷ் கல்யாணின் கேரியர் கிராஃப் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளையில், வர்த்தக வட்டாரத்திலும் அவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், ஹரிஷ் கல்யாணின் கேரியரில் முதன்முறையாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்தே ’டீசல்’ திரைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

75-க்கும் அதிகமான இடங்களில் 5000-க்கும் அதிகமான ஆட்களைக் கொண்டு 100 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ’டீசல்’ படத்தில் இருந்து வெளியான ‘பீர் சாங்’ பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் வசீகரிக்கும் டியூன்கள் மற்றும் பாடல்களால் பல தரப்பினரின் ஆர்வத்தையும் கவர்ந்தது.

சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளி வாழ்த்துக்களுடன் படப்பிடிப்பின்போது ஒட்டு மொத்த குழுவினரின் கடின உழைப்பைக் காட்டும் சிறப்பு வீடியோவையும் படக் குழு வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு வீடியோ முழு குழுவினரின் கடின உழைப்பை அங்கீகரிக்கும்விதமாக உள்ளது.

ஆடியோ, டிரெய்லர் மற்றும் டீசர் வெளியீட்டு அறிவிப்புகளுடன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக் குழு விரைவில் தெரிவிக்கும்.

Our Score