நடிகர் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து குடும்ப பொழுது போக்கு மற்றும் மென்மையான காதல் திரைப்படங்களையே இதுவரையிலும் தந்துள்ளார்.
அவர் எப்போதும் ஒரு அழகான சாக்லேட் பாய் ஆகவும், பக்கத்து வீட்டு பையன் போன்ற பண்புகளுடன் கவனிக்கப்படுபவராகவே இருந்து வந்திருக்கிறார். தன் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயதினருக்கும் பிடித்தவராக இருக்கிறார்.
தற்போது ஒரு புது முயற்சியாக தனது அடுத்த படமான ‘டீசல்’ படத்தின் மூலம் அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஜானரில் அறிமுகமாகவுள்ளார் ஹரீஷ் கல்யாண்.
இந்த ‘டீசல்’ படத்தை Third Eye Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளரான M.தேவராஜுலு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, P.சாய்குமார், S.கருணாஸ், வினய் ராய், அன்னையா, T.P.அருண் பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா. N.தீனா (தினேஷ்), தங்கதுரை K, லட்சுமி சங்கர், S. தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார். S, சச்சின், ரமேஷ் திலக், செல்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி எழுதி இயக்குகிறார். தொழில் நுட்பக் குழுவில் திபு நினன் தாமஸ் (இசையமைப்பாளர்), M.S.பிரபு (ஒளிப்பதிவு), ஷான் லோகேஷ் (படத் தொகுப்பு), ரெம்பன் (கலை இயக்குனர்), ராஜசேகர் (சண்டை பயிற்சி இயக்கம்), பிரவீன் ராஜா (ஆடை வடிவமைப்பாளர்), Tuney ஜான் (வடிவமைப்பாளர்), மற்றும் DEC (மார்க்கெட்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட்).
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஏற்கனவே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் அடுத்த போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படம் சென்னை மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் சுமார் 75 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரையிலும் ஹரிஷ் கல்யாண் கேரியரில் இந்த ‘டீசல்’ படம்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதுமான திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.