full screen background image

நல்ல போலீஸ்காரர்களை பற்றிய கதை ‘தீரன் அதிகாரம் ஒன்று’..!

நல்ல போலீஸ்காரர்களை பற்றிய கதை ‘தீரன் அதிகாரம் ஒன்று’..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் ஹீரோ கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் H.வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இது எனது 15-வது திரைப்படம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்.

IMG_1212

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான், ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு சென்றோம். அங்கே 42 டிகிரி வெயில் மற்றும் குளிரை தாங்கிக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம்.

இந்தப் படத்தின் கதை நான் ‘சிறுத்தை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே எனக்கு தெரியும். அப்போது என்னிடம் வந்த அதே கதை, இப்போது மீண்டும் என்னிடம் வந்தது.

நாம் ரோட்டில் நடந்து செல்லும்போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணை பார்க்க மாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணை பார்ப்பார். அவரிடம் சென்று பேசினால்… அவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம் ‘மாற்று உலகத்தை’ பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பர் ஒருவர் கூறுவார். இதேபோல்தான் இந்த படத்தின் கதை என்னையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

நம்மை சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று யோசித்துதான் இந்தக் கதையில் கண்டிப்பாக நாம் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன்.

நாங்கள் ராஜஸ்தானுக்கு படபிடிப்புக்கு சென்றபோது அங்கே ஓரிடத்தில் இதோ நம்ம கார்த்தி வரார் என்ற தமிழ் குரல் கேட்டது. அவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் நம்ம சென்னை, சௌகார்பேட்டை மக்கள்தான்.

அவர்களிடம் நீங்கள் எப்படி இங்கே எப்படி என்று கேட்டபோது ‘பூஜைக்காக வந்தோம், குடும்ப நிகழ்வுக்காக வந்தோம்…’ என்று பதில் அளித்தனர்.

IMG_1283

‘தீரன் அதிகாரம் ஒன்று’ முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிக்கும்வகையில் இந்த படத்தின் காட்சிகள் இருக்கும்.

இந்தப் படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும்போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல், காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல், காரை வேகமாக ஒட்டி செல்லும்போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல், மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன். தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராக மட்டுமே இருந்துள்ளேன். இந்தப் படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்…” என்றார் கார்த்தி.

IMG_1300

நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசும்போது, “போலீஸ் என்றாலே தவறானவர்கள்தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்கு காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் தான். 

அந்தத் தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில், அரசியலில், பத்திரிக்கையாளர்களில்  நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல்தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள்.

நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல்தான் இந்த படத்திலும் இருப்பார்கள். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ முழுக்க, முழுக்க கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும்.

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. படத்தில் ‘தீரன் திருமாறன்’ என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். போலீசை சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம். ஜிப்ரான் மிகச் சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார்…” என்றார் இயக்குநர் வினோத்.

Our Score