புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சீமத்துரை’.
கீதன், வர்ஷா பொல்லம்மா இருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், ‘கயல்’ வின்சென்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – D திருஞானசம்பந்தம், இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின் பாடல்கள் – அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன், நடனம் – சந்தோஷ் முருகன், படத் தொகுப்பு – T.வீர செந்தில்ராஜ், கலை இயக்கம் – என்.கே.ராகுல், இணை தயாரிப்பு – ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், தயாரிப்பு நிறுவனம் – புவன் மீடியா வொர்க்ஸ், தயாரிப்பு – E.சுஜய் கிருஷ்ணா, எழுத்து, இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்.
படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் பேசுகையில், “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள் பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் அனைவரையும் ரவுண்டு கட்டி ரவுசு பண்ணுவதுதான் படத்தின் ஹீரோவான ‘சீமத்துரை’யின் அடையாளம்.
அப்படி ஒரு அலட்சிய அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்தப் படத்தின் கதைக் கரு.
வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம்தான் இந்த ‘சீமத்துரை’ திரைப்படம்..” என்றார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.









