full screen background image

தர்ஷன் – தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

தர்ஷன் – தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ‘சேத்துமான்’ படப் புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன் – ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘சேத்துமான்’ என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை, வசனத்தில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார்.  

இந்தப் புதிய படத்தில் ‘ஹிருதயம்’,  ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படப் புகழ் தர்ஷனா ராஜேந்திரன், ‘கனா’ புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர்.  

திரைக்கதை, இயக்கம் – தமிழ், கதை, வசனம் – பெருமாள் முருகன், தயாரிப்பு – செ.வினோத்குமார், ஒளிப்பதிவு – தீபக், இசை – பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ், படத் தொகுப்பு – கண்ணன், கலை இயக்கம் – பி.ஜெயமுருகன், ஒலிப்பதிவு – அந்தோனி பி.ஜெ.ரூபன், சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், உடைகள் வடிவமைப்பு – ஈகா பிரவீன், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் – திவாகர்.ஜெ, விளம்பர வடிவமைப்பு – சிவா, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிறுவனம் – சினிமாக்காரன்.

லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் பேசப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் தமிழ் பேசும்போது, “நம் நாட்டில் எங்கும் அரசியல், எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி, சாமானிய அரசியல்கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில், அரசியல் செய்யும் மாற்றங்களை உண்மைத்தன்மையுடன் சித்தரிக்கும் படம் இது” என்றார்.

இரவு – பகல் என ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப் பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து  வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.

Our Score