எஃப்.எம்.எஸ். மீடியாஸ், சி.எஸ்.எம். கிரியேஷன், சஷ்டி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் “தர்ணா”.
ஜனவரி மாதம் வெளியான “ராட்ட” என்ற வெற்றித் திரைப்படத்தைத் தொடர்ந்து அதே கூட்டணி தற்போது “தர்ணா” என்ற திரைப்படத்தைத் துவக்கியுள்ளது.
நேற்று (24.5.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் பகுதியில் மிகவும் பிரபலமான திருக்கோயிலாக விளங்கும் சூரியகிரி மலையில் அமைந்துள்ள தமிழ்க் கடவுள் முருகன் திருக்கோயிலில் இந்த தர்ணா படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் பிரபல நடிகர் – நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இணைத் தயாரிப்பாளர் சிஎஸ்எம் பழனிசாமி, சஷ்டி அ. பழனிசாமி, நிருவாகத் தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழி ஆகியோருடன் தொழில் அதிபர்கள், திரைப்பட நண்பர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல் காட்சியினை இயக்குநர் சக்திவேல் நாகப்பன் ஆக்சன் சொல்ல, நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழி கிளாப் அடிக்க, சந்திரன் சுவாமி ஒளிப்பதிவுச் செய்ய படத்தின் நாயகன் கருந்தமிழ் சூரியன், நாயகி எலன் ஆகியோர் முதல் காட்சியில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
ஒரு வித்தியாசமான அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த “தர்ணா” படத்தின் இசையினை இசை இளவரசன் பரணி அமைத்திருக்கிறார்.
பிரபலமான திரை நட்சத்திரங்கள், முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றும் இந்த “தர்ணா” படம் வருகின்ற தீபாவளி பண்டிகை தினத்தில் வெளியாக இருக்கிறது.
ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.









