லைகா புரொடெக்சன்ஸின் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி ஜோடி..!

லைகா புரொடெக்சன்ஸின் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி ஜோடி..!

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் நேரடியாகவே ஈடுபட்டுள்ளது.

‘கத்தி’ படத்தை தயாரித்தபோது ராஜபக்சேவின் கூட்டாளி நிறுவனம் என்ற முறையில் கடுமையான எதிர்ப்பை லைகா நிறுவனம் சம்பாதித்த்து நினைவிருக்கலாம். அப்போதைக்கு மட்டும் டைட்டில் லைகா நிறுவனத்தின் பெயர் இல்லாமல் கத்தி படத்தை வெளியிட்டு சமரசம் செய்து கொண்டது.

இப்போது தமிழ்நாட்டில் அரசியல் சூழல் மாறியுள்ளதால் இதைப் பற்றி கேட்கவும் ஆளில்லாத நிலைமை என்பதால் வழக்கம்போல நேரிடையாக களத்தில் குதித்துள்ளது லைகா நிறுவனம்.

இந்நிறுவனம் தயாரிக்கும் இன்னமும் பெயரிடப்படாத அடுத்த படத்தில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் ஜோடியான ஜி.வி.பிரகாஷும், ஆனந்தியும் நடிக்கிறார்கள். மேலும் ‘பருத்தி வீரன்’ சரவணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு, நிரோஷா, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு – ஆண்ட்டனி ரூபன், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், உடை வடிவமைப்பு – ஜாய் கிரிஸில்டா, நடன அமைப்பு – பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், எழுத்து, இயக்கம் – சாம் ஆண்ட்டன்.

படத்தின் துவக்க விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது.

Our Score