full screen background image

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘தண்டகாரண்யம்’ திரைப்படம்.! 

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘தண்டகாரண்யம்’ திரைப்படம்.! 

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். பல வெற்றிப் படங்களை அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘சேத்துமான்’, ‘குதிரை வால்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘பொம்மை நாயகி’, ‘ஜெ பேபி’, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களும் தயாரிப்பில் இருக்கின்றன.

இந்நிலையில் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின்  இயக்குநரான அதியன் ஆதிரை,  தனது இரண்டாவது படமாக ‘தண்டகாரண்யம்’ என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தையும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர், பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா, இசை – ஜஸ்டின் பிரபாகர், படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – த.ராமலிங்கம், பாடல்கள் – உமாதேவி, தனிக்கொடி, அறிவு, சண்டைப் பயிற்சி இயக்கம் – பிசி. நடன இயக்கம் – ஸ்ரீகிரிஷ், ஒலிப்பதிவு – சுரேன், உடைகள் – சுபீர், விளம்பர வடிவமைப்பு – கபிலன், நிர்வாக தயாரிப்பு – பா.சரவணன், மனிட் பேடி, பி.ஜே.பிரகாஷ், இணை தயாரிப்பு – ரூபேஷ், தயாரிப்பு -அதிதி ஆனந்த், S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஷ்வரன், பா.இரஞ்சித். பத்திரிகை தொடர்பு – குணா.

ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Our Score