full screen background image

சச்சின்-அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது..!

சச்சின்-அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது..!

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது..!

விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சோமசுந்தரம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின், இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி, இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.  

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத் தொடரிலும் அபர்நிதியின் நடிப்பிற்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘கும்கி’ அஸ்வின், ‘இன்ஸ்டாகிராம்’ சென்சேஷன் ரவீனா தாஹா, ‘பிக் பாஸ்’ புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து இயக்கம் – ரமேஷ் பழனிவேல், தயாரிப்பு – ஆர்.சோமசுந்தரம், இசை – ரோனி ரஃபேல், ஒளிப்பதிவு – ஆர்.எஸ். ஆனந்த குமார் எம்.எஃப்.ஐ, படத் தொகுப்பு – ரவிக்குமார்.எம், கலை இயக்கம் – விஜய் ராஜன், பாடலாசிரியர் – கார்த்திக் நேதா, தயாரிப்பு நிர்வாகம் – குமார் வீரப்பசாமி, சண்டை இயக்கம் – ராக் பிரபு, ஆடை – கடலூர் எம்.ரமேஷ், ஒலிக் கலவை – ஹரிஷ், ஒலி வடிவமைப்பு – ராஜு ஆல்பர்ட், VFX & DI – Accel Media, வண்ணம் – ஜி.எஸ்.முத்து, தயாரிப்பு வடிவமைப்பு – வி.பாலகிருஷ்ணன், படங்கள் – முத்து வேல், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி’ஒன், விளம்பர வடிவமைப்பு – யுவராஜ் கணேசன்.

மோகன்லாலின் தேசிய விருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய  ரமேஷ் பழனிவேல், இந்த ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும்.

ஹாரர்- சஸ்பென்ஸ் – த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

‘பீட்சா’, ‘ராட்சசன்’, ‘பிசாசு’ மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ‘Demon’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய  திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது.

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் இந்த ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் மிஷ்கினும் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது குறித்தான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Our Score