full screen background image

சினிமா பற்றி நெகடிவ் கமெண்ட் செய்வதே தவறு – நடிகர் டெல்லிகணேஷ் பேச்சு..!

சினிமா பற்றி நெகடிவ் கமெண்ட் செய்வதே தவறு – நடிகர் டெல்லிகணேஷ் பேச்சு..!

புதிய படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படத்தின் தன்மை பற்றி நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் செல்போனின் எஸ்.எம்.எஸ். மூலமாகவும், இணையத்தளங்கள் மூலமாகவும் கமெண்ட் செய்யும் இன்றைய இளைய தலைமுறையினரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்கிறார் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்.

இன்று மாலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘காதலுக்குக் கண்ணில்லை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “சினிமாவை அழிக்கவே முடியாதுங்க. அது மக்களோட ஒன்றிப் போனது. வீட்ல லேடீஸெல்லாம் அவங்க ஹஸ்பெண்ட்கிட்ட, “ஏங்க.. ஒரு கடைக்குக் கூட்டிட்டுப் போயிருக்கீங்களா..? ஒரு சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கீங்களா?”ன்னுதான் கேக்குறாங்க. அவங்க புருஷன்கள்கிட்டயே அதை ஒரு கடமையா நினைச்சுக் கேக்குறாங்க. அந்த அளவுக்கு சினிமா நம்ம வாழ்க்கைல இரண்டறக் கலந்திருக்கு..

இப்போ சினிமா பார்த்துக்கிட்டிருக்கும்போதே போன் செஞ்சு ‘படம் ஊத்திக்கிச்சு’ன்னு சொல்றாங்க.. ‘படம் அவ்வளவுதான்’னு கமெண்ட் செய்றாங்க.. இதைச் செய்யவே கூடா்து.. ஒருத்தருக்கு ஒரு படம் பிடிக்கும். இன்னொருத்தருக்கு அது பிடிக்காது.. ஒருத்தருக்குப் பிடிச்சது, இன்னொருத்தருக்கும் பிடிக்காதுன்றது இல்லீல்ல.. ஒரு சினிமா எடுக்குறாங்கன்னா அதுனால 300, 350 குடும்பங்கள் வாழுது.. தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்குது. அப்படியொரு சூழ்நிலை இருக்கும்போது இப்படியெல்லாம் சினிமாவை கமெண்ட் பண்றது ரொம்பத் தப்பான செயல்..” என்றார்.

படம் நல்லாயிருந்தா அதே ஆளுகதான் “மாப்ளை படம் சூப்பர்.. அடுத்த ஷோவுக்கு டிக்கெட் எடுத்து வைச்சிருக்கேன். வர்றியா?”ன்னு அதே செல்போன்லதான் மெஸேஜ் அடிக்கிறாங்க.. அவங்களுக்குப் படம் பிடிச்சா சொல்லிடப் போறாங்க. பிடிக்கலைன்னாலும் அதேதான்..!

எல்லா நல்ல படத்தையும் மக்கள் ஓட வைச்சிருக்காங்க. எல்லா கெட்ட படத்தையும் தியேட்டரைவிட்டே ஓட வைச்சிருக்காங்க..! இதெல்லாம் சினிமா ரசிகர்கள் வாழ்க்கைல சகஜம் ஸார்..!

Our Score