full screen background image

தாவூத் – சினிமா விமர்சனம்

தாவூத் – சினிமா விமர்சனம்

இந்த படத்தை TURM  புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தங்களது இரண்டாவது படைப்பாக தயாரித்துள்ளார்.

பரோல், ‘உடன்பால், ‘பெண்குயின், ‘சேதுபதி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் ‘வத்திகுச்சி’, ‘காலா’ போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத் ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார். பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு – S. உமா மகேஸ்வரி.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குர் பிரசாந்த் ராமன்.

தாவூத் என்ற பெயர் வைத்துவிட்டு குடும்ப கதையா எடுக்க முடியும்? வழக்கம் போலவே போதை மருந்து கடத்தல் கும்பல்கள் பற்றிய கதையாகத்தான் இந்தப் படமும் வந்திருக்கிறது.

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார் லிங்கா. கொஞ்சம் அப்பாவி. எதுவும் தெரியாது. அந்தக் காருக்கான தவணைத் தொகையைக்கூட கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். எந்நேரமும் கார் அவருடைய கையை விட்டுப் போகும் சூழல்.

இந்த நிலையில் மும்பையில் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக இருப்பவர் தாவூத். அவனுடைய அடியாள் அபிஷேக். சென்னையில் இருந்து கொண்டு தன்னுடைய போதைப்பொருள் ஆப்ரேஷன் செய்து வருகிறார். இவருக்கு சென்னையில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனர் ஜெயக்குமார் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறார்.

பொதுவாக தாவூத்தின் போதை மருந்து கடத்தல் சென்னையில் அபிஷேக் மூலமாகத்தான் நடக்கும். ஆனால், இப்போது இதில் இன்னொரு லோக்கல் தாதாவான சாய் தீனாவும் தலையிடுகிறார். இந்த முறை தாவூத் அனுப்பும் போதை மருந்தை அப்படியே முழுமையாக கைப்பற்றி வேறு இடத்தில் கைமாற்றி பணம் சம்பாதிக்க தீனா நினைக்கிறார்.

அதேசமயம் போலீஸ் தனிப் படைகளை அமைத்து தங்களை தேடி வருவதை உணர்ந்த அபிஷேக் இந்த முறை ஒரு புது ஆளின் மூலமாக போதை மருதை கடத்தலாம் என்று திட்டமிடுகிறார். அதற்கான ஒரு ஆளை தேடுகின்ற பொழுது தற்செயலாக லிங்கா அவர்களிடம் சிக்கிவிடுகிறார்.

இப்போது லிங்காவின் மூலமாக அந்த போதை மரத்தை கடத்தும் முயற்சிகள் இவர்கள் ஈடுபட… இன்னொரு பக்கம் சாய் தீனா இந்த போதை மருந்தை கைப்பற்ற நினைக்க… மூன்றாவதாக போலீசும் உள்ளே நுழைந்து அபிஷேக், சாய் தீனை இருவரையும் மொத்த கும்பலோடு கைது செய்ய பிடிக்க முற்படுகிறது. இதில், ஜெயித்தவர் யார் என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.

நாயகனாக நடித்திருக்கும் லிங்கா ஒரு அப்பாவித்தனமான கதாப்பாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார். அவருடைய வெகுளித்தனமான பேச்சும் தன்னுடைய வாழ்க்கையை தானே ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பரிதவிப்பும்தன்னுடைய தங்கைக்காக இந்த வேலையை செய்தே தீர வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயத்தில் அவர் இருக்கும் பொழுது நிச்சயமாக இந்த போதை மருந்து கடத்தல் பற்றிய ஒரு எதிர்ப்பு உணர்வு நம்மிடம் எழவில்லை. அந்த அளவுக்கு தன்னுடைய நியாயத்தை தன்னுடைய நடிப்பின் மூலமாக பதிவு செய்திருக்கிறார்.

சாரா ஆச்சர் என்ற நாயகி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சரத் ரவிக்கு கீப்பாக படம் முழுவதும் வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்கில்லம் வருவது, ஏதோ ஒரு சஸ்பென்சை அவர் வைத்திருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனாலும், இவருடைய கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் சிம்ப்ளி சூப்பர் என்று சொல்லலாம்.

அசிஸ்டென்ட் கமிஷனராக நடித்த ஜெயக்குமாரின் வில்லத்தனம் கலந்த நடிப்பு நம்மை பெரிதும் கவர்கிறது. அதேபோல் எத்தனையோ படங்களில் வில்லனாக நடித்திருக்கும் சாய் தீனா, இந்தப் படத்திலும் வில்லனாக நடித்து தான் நடித்த படங்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறார்.

அதேபோல் திலீபன்,ர்ஜத், சரத் ரவி என்று ஒரு கூட்டமும் இந்தப் படத்தில் தங்களுடைய நடிப்பை சொல்லிக் கொடுத்தது போலவே செய்திருக்கிறார்கள். அதிலும் சரத் ரவியின் நடிப்பு பிரமாதம்..!

சரத் வளையாபதி மற்றும் பிராண்டன் சுஷாந்த் இருவரின் ஒளிப்பதிவில் படம் தங்கு தடையில்லாமல் பட்ஜெட் குறைபாட்டை ஸ்கிரீனில் காட்டாமல் தங்களால் முடிந்த அளவுக்கு ஒரு மிகச் சிறப்பான ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார்கள்.

ராகேஷ் அம்பிகாபதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசைகூட படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஆர்.கே.ஸ்ரீநாத்தின் படத் தொகுப்பு கச்சிதம். எந்த ஒரு கதாபாத்திரமும் இந்தப் படத்தில் சோடை போகவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமான காட்சிகளை இயக்குர் வைத்திருப்பதால் அதையும் மிக அழகாக நறுக்கி கத்தரி போட்டு கொடுத்திருப்பதால் நம்மால் படத்தை கடைசிவரையிலும் நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

இந்த படத்தில் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது படத்தின் இயக்கம். இயக்குநர் பிரசாந்த் ராமனின் இயக்கம் மெஸ்மரிசம் என்கின்ற வகையில் ஒரு சின்ன பட்ஜெட்டில் உருவான படம் என்ற சிந்தனையே இல்லாமல் மிக அழகாக இயக்கம் செய்திருக்கிறார் இயக்குர். அதற்காக அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம்.

ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் டைப்பில் போதை மருந்து கடத்தல் பற்றிய ஒரு கதையை அழகாக இயக்கத்தில் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பும் இதேபோல் பல திரைப்படங்கள் போதை மருந்து கடத்தலை பற்றி வந்திருக்கின்றன. அவைகளில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சமாக இந்தப் படத்தின் இயக்கம் மிகச் சிறப்பு என்று சொல்லலாம்.

தாவூத் என்று படம் முழுவதும் தாவூத் புராணத்தை பாடிவிட்டு அந்த தாவூத் எப்படி இருப்பார்? யார் அவர்?.. என்று நம்மை ஏங்க வைத்துவிட்டு கடைசி வரையிலும் படத்தை பார்க்க வைத்திருக்கிறார் இயக்குர். அதே சமயம் தாவூத் என்பதற்கு அவர் சொன்ன விளக்கம் மட்டுமே நமக்கு கொஞ்சம் தலையை சுற்றியது போல அமைந்துவிட்டது.

ஒரே ஒரு சஸ்பென்சை மட்டும் படத்தில் வைத்துக் கொண்டு கடைசி வரையிலும் அதை மிக அழகா திரைக்கதையில் பார்க்க வைப்பது போன்ற தன்னுடைய சிறந்த இயக்கத்தினால் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கும் இயக்குருக்கு நமது பாராட்டுக்கள்.

RATING : 3,5 / 5

Our Score