full screen background image

நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தசரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது

நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தசரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது

ஶ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி, மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ‘தசரா’.

இந்தப் படத்தின் நானி நாயகனாக நடிக்கிறார். தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா, தயாரிப்பு –  சுதாகர் செருக்குரி, தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீல‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஒளிப்பதிவு –  சத்யன் சூரியன் I.S.C., இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – நவின் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா, நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி, மக்கள் தொடர்பு –  J.சதீஷ் – S.சதீஷ் குமார் (AIM).

நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுது போக்கு திரைப்படமாக இந்த ‘தசரா’ படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான ்ரீகாந்த ஒடெலா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.  

இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன் மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித் துணுக்கு சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் நடிகர் நானி லுங்கியுடன் கரடுமுரடான தோற்றத்தில் தோன்றியுள்ளார். அவரது இந்த தோற்றம் பெரும் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.

நடிகர் நானி தனது கூட்டத்துடன் சிங்கரேணி சுரங்க பகுதியில் நடந்து வருகிறார். அவரது வித்தியாசமான முரட்டு தோற்றம் நம்மை மிரட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் சந்தோஷ் நாராயணனின் பின்ணனி இசை இக்காட்சிக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதையில், மாஸ் மற்றும் ஆக்சன் கலந்த அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நானி.

இந்தத் ‘தசரா’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சித் துணுக்கு தற்போது இணைய, சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

Our Score